Tuesday, October 31, 2006

கிராமத்து அரட்டை அரசியல் --- 6

கி.அ.அ.அனானி அனுப்பிய தொடரின் 6-வது பாகம்:
****************************

என்னடா மணி அங்க ஒரே சத்தமா இருக்கு ? பேப்பரிலிருந்து நிமிர்ந்து பார்த்த மூக்கையண்ணன் கேட்டார்.

""ஒரு பொம்பளை ரவுசு விட்டுக்கிட்டு இருக்குண்ணே..அண்ணன் கல்யாணத்துக்கு கோயிலுக்கு போச்சாம்...அங்க பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த இதுக்கும் ஒரு தாலியைக் கட்டி கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாங்களாம்..அண்ணன் கல்யாணம் முடிஞ்ச கையோட, இந்தம்மாவக் கூப்பிட்டு இது பக்கத்துல நின்ன ஆளு கிட்ட ஒரு தாலியக் குடுத்து இது கழுத்துல கட்ட சொல்லிட்டாங்களாம்"""

"அடப்பாவி..."என்று விவேக் பாணியில் சவுண்டு விட்ட மலையாண்டி "இப்படியெல்லாம் கூடவா நடக்கும்.?..இந்தப் பொம்பளை கிட்ட கேக்கக் கூட இல்லையாமா?...அது சரி தாலி கட்டுர வரை இது மறுத்து பேசலையா..கம்முனு வாயில கொளுக்கட்டைய வச்சுக்கிட்டு நிண்டுக்கிட்டிருந்துச்சு? கூட இருந்த அண்ணன்காரனும் ஒண்ணும் சொல்லலியா ?" என்று கேள்விகளை அடுக்கினான்

"அண்ணன் கல்யாண மூடுல கம்முனு இருந்துட்டாராம்...இது அண்ணன் கல்யாணத்துல வச்சு அங்க இருந்த பெரியவங்களை எதுத்து பேச வேண்டாம் அப்படீன்னு "மரியாதை நிமித்தமா " கம்முனு இருந்துச்சாம்பா" என்றான் மணி

" அட என்னப்பா..இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க ? அது சரி ..இந்தக் கூத்து எப்ப நடந்துச்சு ?இப்ப என்னாச்சு ? என்றார் மூக்கையண்ணன்

"அது ஆச்சுண்ணே நாலு மாசம்..இப்ப அந்த ஆளு கூட குடுத்தனம் நடத்தலை..அதுவுமில்லாம போன திருவிழால இது வேண்டாத ஒருத்தரப் பாத்து சிரிச்சு பேசிக்கிட்டு இருந்துச்சாம்.. அதனால கடுப்பாகிப் போய் தாலி கட்டுன ஆளு... இது எனக்கு பொண்டாட்டி இல்லை அப்படீன்னு வெட்டி வுட்டாராம்..இந்தப் பொம்பளையானா... மொதல்ல எனக்கு கண்ணாலமே ஆவலை ...இவரு யாரு அறுத்து வுட அப்படீன்னு ரவுசு விடுது.. "என்றான் மணி

"என்னாங்கடா சொல்றீங்க ...நாலு மாசமா கம்முனு இருந்துச்சா..ஊரெல்லாம் கல்யாணம் ஆயிருச்சு...கல்யாணம் ஆயிருச்சு அப்படீன்னு பேசியிருக்குமேடா இந்த நாலு மாசமா..அப்பவுமா கம்முனு இருந்துச்சு...அண்ணன் மரியாதை ..சபை மரியாதை அல்லாத்தையும் ரொம்ப காப்பாத்தியிருக்கப்பா....டேய் ...தியாக செம்மல்...குடத்திலிட்ட குத்து விளக்குடா..அந்தப் பொண்ணு " என்றார் மூக்கையண்ணன்...

" ரொம்ப ஓவரா பில்டப்பு குடுக்காதீங்க...தாலி கட்டுன ஆளு பாக்குறதுக்கு வெள்ளையுஞ் சொள்ளையுமா அளகா இருந்துருப்பார்..கடச்ச வரைக்கும் லாபம் ..அப்படியே பிக்கப் ஆயி போயிறலாம் அப்படீன்னு சும்மா இருந்திருக்கு..அப்புறம் அந்தாளுக்கு சொத்து பத்து ஒண்ணுமில்லையினு தெரிஞ்சப்புறம் இப்ப சவுண்டு விடுது " என்றான் மலையாண்டி.

" அது சரி..அந்தப் பொண்ணு பேரென்னடா " என்றார் மூக்கய்யண்ணன்

" ராதிகா " என்ற மலையாண்டியிடம் " அப்ப அண்ணன் பேரு ??? " என்று மணி கேட்க அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மலையாண்டி வடிவேலு ஸ்டைலில் "ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுட்டாங்கையா " என்றபடி அங்கிருந்து நடையைக் கட்டினான்

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

said...

//" ராதிகா " என்ற மலையாண்டியிடம் " அப்ப அண்ணன் பேரு ??? " என்று மணி கேட்க அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
//

Super :)))

G.Ragavan said...

இது கிசுகிசு வகைக் கதையா? அல்லது உண்மை நிகழ்வை மறைபொருளாய்ச் சொல்வதா? ஆனால் புரிகிறது என்றே நினைக்கிறேன். புரிந்து விட்டது என்றே நினைக்கிறேன். :-)

G.Ragavan said...

இது கிசுகிசு வகைக் கதையா? அல்லது உண்மை நிகழ்வை மறைபொருளாய்ச் சொல்வதா? ஆனால் புரிகிறது என்றே நினைக்கிறேன். புரிந்து விட்டது என்றே நினைக்கிறேன். :-)

said...

ஏங்க..அக்கா ராதிகா, அண்னன் சரத்து கூட போன போது அதிமுக வுல சேத்து விட்டதை(யாரு?) இப்படி சொல்ல வாறீங்களா..அதை நேர சொல்லிற வேண்டியதுதானே அப்படீன்னு ராகவன் தம்பி கொழம்புது பாருங்க :))

Nakkiran said...

சூப்பர் அப்பு... இதெல்லாம் என்ன கூத்தோ

said...

-:))
Anony
அரசியல் பயணத்தில் இதெல்லாம்
சகஜமப்பா !!
மார்ல சாய்ஞ் புதையல் எடுக்க அண்ணன் சரத் கிட்ட சரக்கு இல்லப்பா

அன்புள்ள
yet Another Anony.

enRenRum-anbudan.BALA said...

ஜிரா, நக்கீரன் மற்றும் அனாஇ நண்பர்களே,

வருகைக்கு நன்றி !

//ஆனால் புரிகிறது என்றே நினைக்கிறேன். புரிந்து விட்டது என்றே நினைக்கிறேன். :-)

//
ஜிரா, உங்களுக்கு புரியாமல் இருக்குமா ;-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails